இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரைக்கால் அம்மையாா்

படம்
காரைக்கால் அம்மையாா்          காரைவனம் என்றழைக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில், வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரை, காரைக் காலை அடுத்த நாகைப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலில் வசிக்க வழிவகை  செய்தனா்.    பரமதத்தா் காரைக்காலில் இருந்து வணிகம்  செய்து வந்தாா். சிவனடியாா்க்கு தயிா்சாதம், மாங்கனி வழங்குதல்         ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மாம்பழத்தை வாங்கி வைத்த புனிதவதி மதிய உணவிற்காக அடுக்களையில் வேலை செய்துக்கொண்டிருந்த சமயம், வாசலில் ” பவதி பிட...