இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முத்துலட்சுமி ரெட்டி

படம்
  முத்துலட்சுமி ரெட்டி   முத்துலட்சுமி ரெட்டியின் குடும்பம்           முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணத்தில் 1886-ல் நாராயணசாமி, சந்திரம்மாள் இணையருக்கு மூத்த மகளாக பிறந்தார். தந்தையார் நாராயணசாமி வழக்கறிஞர். தாயார் சந்திரம்மாள் பாடகர், இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். முத்துலட்சுமி ரெட்டியின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் தம்பி இராமையா. முத்துலட்சுமி ரெட்டி பள்ளி மற்றும் கல் லூாி படிப் பு  முத்துலட்சுமி நான்கு வயதில் திண்ணைப்பள்ளியில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். பதின்மூன்று வயது வரை கீழ் நிலைக்கல்வியைப் பயின்றார். தந்தை வீட்டுக்கு ஆசிரியரை வரவைத்து பாடம் கற்கச் செய்தார். 1902-ல் மெட்ரிக்குலேஷன் தேர்வில் முதல் மாணவியாகத் தேறினார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 1904-ல் விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானின் ஒப்புதலின் பேரில் முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி கிடைத்தது. சிறிது...

முதல் தற்கொலைப்படைப் போராளி குயிலி

படம்
  முதல் தற்கொலைப்படைப் போராளி குயிலி அந்த காலகட்டத்தில் பெரியமுத்தன் - ராக்கு தம்பதியினரின் மகளாகப் பிறந்தவர் குயிலி. விளை நிலங்களை நாசம் செய்த காளையை அடக்கப் போய் உயிரை விட்டவர் குயிலியின் தாய் ராக்கு. மனைவியின் இறப்புக்குப் பிறகு முத்துப்பட்டிக்குச் சென்று அங்கிருந்து அரண்மனைக்கு தோல் தைக்கும் வேலைக்குச் சென்றார் பெரியமுத்தன். ராணி வேலுநாச்சியாரின் வீரதீர பராக்கிரமங்களை நாள்தோறும் தன் மகள் குயிலிக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தார் பெரியமுத்தன். வேலுநாச்சியார் பற்றிய வீரக் கதைகளைக் கேட்டு, அவரைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தார் குயிலி. ஆனால், பாதுகாவலர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். இந்தத் தகவல் வேலுநாச்சியாருக்குப் போனதும் பெரியமுத்தனையும், குயிலியையும் அழைத்து, நீங்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய அளவுக்கு சுதந்திரம் உண்டு என உத்தரவிட்டார். பின்னர் வேலுநாச்சியாரின் அன்பிற்குரியவராக அவரின் மனதில் இடம்பிடித்தார் குயிலி. வேலுநாச்சியாாின் படைத்தளபதி ஆன கதை வேலுநாச்சியாருக்கு ஒற்றனாகச் செயல்பட்டார் குயிலியின் தந்தை பெரியமுத்தன். குயிலியும் தந்தைக்கு உதவியாக தகவல்க...

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்

படம்
  இராணி வேலு நாச்சியார்  (03-01-1730 – 25-12-1796) இளமைக்காலம் இராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.இவர் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தா . இவரை ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர்  ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்பட  மொழிகள் கற்றார் ஆயுதப் பயிற்சி பெற்றார்.  குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி அளித்தனர். திருமண வாழ்க்கை இராணி வேலு நாச்சியார்  தமது 16 வயதில் 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத் தேவருக்கு மனைவியானார்.  இந்த தம்பதியர் 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக சிவகங்கையை ஆட்சி செய்தனர். கணவாின் மரணம்  1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார். தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப...

வீரப்பெண்மணி “ஜான்சி ராணி”

படம்
  வீரப்பெண்மணி “ஜான்சி ராணி”  இன்றளவும் நம் பெண்களில் யாரேனும் வீரமாக பேசினால் நீ என்ன " ஜான்சி ராணி" யா என்றும் கேட்பதை நாம் வழக்கத்தில் உள்ளது.  யாா் அந்த    “ஜான்சி ராணி” , அவா் வீரமங்கை என ஏன் அழைக்கப்படுகிறாா் என்பதை பாா்ப்போமா? ஜான்சிராணி பிறப்பு  : ஜான்சி ராணி இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி [தற்போதைய வாரணாசியில்] மராத்திய பிராமண குடும்பத்தில் மெளரியபந்தர் மற்றும் பகீரதிபாய் என்ற தம்பதிக்கு 19.11.1828  ஆம்  ஆண்டு மகளாய் பிறந்தார். இவருக்கு அவர்களது பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா . இவரை அவர்களது குடும்பத்தினர் அன்பாக “மனு”என்றழைத்தனர். ஜான்சிராணியின் இளமைக்காலம் : இவா் தனது நான்காம் வயதில் தன் தாயை இழந்தாா், தந்தையின் அரவணைப்பில் வளா்க்கப்பட்டாா்.  இவரது தந்தை  ஜான்சிராணிக்கு  வாள்வீச்சு மற்றும் குதிரைஏற்றம் போன்ற போா்கலைகளை கற்றுக்கொடுக்க பயிற்சியில் சோ்த்தாா்,   ஜான்சிராணியும்  அவ்வித்தைகளை மிகச்சிறப்பாக கற்றுத்தோ்ந்தாா். ஜான்சிராணியின் திருமணம்  : ஜான்சி ராணியின் தந்தை அவருக்கு திரு...