வீரப்பெண்மணி “ஜான்சி ராணி”

 வீரப்பெண்மணி “ஜான்சி ராணி” 


இன்றளவும் நம் பெண்களில் யாரேனும் வீரமாக பேசினால் நீ என்ன "ஜான்சி ராணி" யா என்றும் கேட்பதை நாம் வழக்கத்தில் உள்ளது.  யாா் அந்த  “ஜான்சி ராணி” , அவா் வீரமங்கை என ஏன் அழைக்கப்படுகிறாா் என்பதை பாா்ப்போமா?



ஜான்சிராணி பிறப்பு :

ஜான்சி ராணி இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி [தற்போதைய வாரணாசியில்] மராத்திய பிராமண குடும்பத்தில் மெளரியபந்தர் மற்றும் பகீரதிபாய் என்ற தம்பதிக்கு 19.11.1828 ஆம் ஆண்டு மகளாய் பிறந்தார். இவருக்கு அவர்களது பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா . இவரை அவர்களது குடும்பத்தினர் அன்பாக “மனு”என்றழைத்தனர்.

ஜான்சிராணியின் இளமைக்காலம்:



இவா் தனது நான்காம் வயதில் தன் தாயை இழந்தாா், தந்தையின் அரவணைப்பில் வளா்க்கப்பட்டாா்.  இவரது தந்தை ஜான்சிராணிக்கு வாள்வீச்சு மற்றும் குதிரைஏற்றம் போன்ற போா்கலைகளை கற்றுக்கொடுக்க பயிற்சியில் சோ்த்தாா்,  ஜான்சிராணியும்  அவ்வித்தைகளை மிகச்சிறப்பாக கற்றுத்தோ்ந்தாா்.

ஜான்சிராணியின் திருமணம் :



ஜான்சி ராணியின் தந்தை அவருக்கு திருமணம் செய்யும் நோக்கில், அவரது 14ம் வயதில் 1842ஆம் ஆண்டு அப்போது ஜான்சியினை ஆண்டுகொண்டிருந்த மன்னர் “ராஜா கங்காதர ராவ் நெவல்கர்” அவருக்கு தனது மகளான மணிகர்ணிகாவை திருமணம் செய்துவைத்தார்.  மணிகர்ணிகா ஜான்சி மன்னரை மணந்ததும் அவருக்கு “லட்சுமிபாய்” என்ற சிறப்பு பட்டம் கிடைத்தது. மேலும் அவர் ஜான்சியின் ராணியாக அரியணையில் அமா்ந்தாா். அன்றிலிருந்து அவருடைய இயற்பெயரான மணிகர்ணிகா மறைந்து “ஜான்சி ராணி லட்சுமிபாய்” என்றானது. 

ஜான்சிராணியின் குழந்தை மற்றும் கணவாின் மரணம் :

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை  பிறந்தது. அவனது பெயர் தாமோதர் ராவ் ஆனால் பிறந்த நான்கு மாதங்களில் அந்த குழந்தை இறந்தது. அதன் பின்னர் அவர்கள் ஒரு குழந்தையினை தத்தெடுத்து அதற்கு தாமோதரராவ் என்று பெயர் சூட்டி வளர்த்தனர்.

மகனின் இறப்பு மன்னருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக  1853ஆம் ஆண்டு மன்னரும் உடல்நலம் பாதித்து இறந்தார்.  ஜான்சிராணி தமது 25ம் வயதில் தனது கணவரை இழந்தாா்.  


ஆங்கிலேயாின் ஆதிக்கம் : 

மன்னன் இறந்ததும் ஆங்கிலேயர்கள் ஜான்சி ராணியை கோட்டையை விட்டு வெளியேற சொன்னார்கள். ஆனால் ஜான்சி ராணி கூறினார் என் மகன் இருக்கும்போது நான் ஏன் கோட்டையை விட்டு வெளியேற வேண்டும் . இவனே இந்த ஜான்சிக்கு அரசன் எனவே நான் கோட்டையினை விட்டு வெளியேற முடியாது என்று அவர்களிடம் முறையிட்டார். ஆனால் , அதற்கு ஆங்கிலேயர்கள் தாமோதராவ் உங்களின் வளர்ப்பு மகன். சட்டப்படி அரச வாரிசு தான் மன்னராக ஏற்றுக்கொள்ளப்படுவார். வளர்ப்பு மகன் அரசனாக முடியாது என்று கூறி 60000 ருபாய் ஓய்வூதியமாக அளித்து அவரை கோட்டையை விட்டு வெளியேற சொன்னார்கள்.பிறகு கோட்டையை விட்டு வெளியேறிய ஜான்சி ராணி அங்குள்ள ராணி மஹாலில் தங்கினார்.

    அவர்கள் கோட்டையை விட்டு வெளியேற சொன்ன அந்த தருணத்தில் இருந்து அவருக்கு ஆங்கிலேயர்கள் மீது போர் தொடுக்கும் எண்ணம் தோன்றியது. இதனால் தனது ஆதரவாளர்களை தேடி சென்று சேர்த்தார் . தனது படை பலத்தினை அதிகரித்து கொண்டு போருக்காக காத்துக்கொண்டிருந்தார்.

இந்திய கிளர்ச்சி : 

1857ல் இந்திய கிளர்ச்சி ஏற்பட்டது அதன் முதன் காரணம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைவரும் எதிர்ப்பினை தெரிவித்தனர். அந்த சமயம் அவர்கள் ஜான்சி ராணியினை பற்றி அதிகம் யோசிக்க வில்லை . 

ஜான்சிராணியின் வாழ்வீச்சு: 

பிறகு 1858ஆம் ஆண்டு தனது மகன் தாமோதர ராவ் மற்றும் தனது ஆதரவு படைகளுடன் குவாலியருக்கு படையெடுத்த ஜான்சி ராணி குவாலிய மன்னனை வீழ்த்தி குவாலியரை தன் வசப்படுத்தினார். அந்த போரில் ஜான்சி ராணியின் வாள் வீசும் வேகத்தினை கண்ட படைவீரர்கள் அவரை நெருங்க பயந்தனர். ஒரு பெண் எவ்வளவு லாவகமாக வாள் வீசுகிறார் என்று குவாலிய மன்னன் திகைத்தான் .முடிவில் போரில் குவாலிய மன்னனை கொன்று குவாலியரை தன் வசப்படுத்தினார்.

வீர மரணம் அடைந்த ஜான்சி ராணி : 

பிறகு ஆங்கிலேய இராணுவம் குவாலியரை கைப்பற்ற தங்களது மிகப்பெரிய படையுடன் குவாலியரை நோக்கி படையெடுத்தது. அப்போது அந்த போரில் ஆண் வேடம் சித்தரித்து தொடர்ந்து சண்டையிட்டு போராடினார்.



ஆனால் பெரிய ஆயுதப்படையுடன் இருந்த ஆங்கிலேயா்களுக்கு எதிராக இவரால் சண்டைபோட்டு சமாளிக்க முடியாமல் எதிரிகளின் படை மூலம் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். ஜான்சி ராணி 1858ஆம் ஆண்டு ஜூன் 18 ல் வீரமரணம் அடைந்தார். அவர்கள் கொன்றது ஜான்சி ராணிதான் என்பது தெரியாமல் அவர்கள் குவாலியரை போரிட்டு கைப்பற்றினர். பிறகு ஜான்சி ராணியின் உடல் குவாலியரின் அருகில் தகனம் செய்யப்பட்டது.


நினைவுச் சின்னங்கள்:



ஜான்சிராணியின் நினைவாக பல இடங்களில் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  ஜான்சி நகரில் உள்ள ஜான்சி கோட்டை, அவரது வீரத்தை பறைசாற்றும் ஒரு முக்கிய இடமாகும்.  நமது இந்திய நாணயங்களிலும், அஞ்சல் தலைகளிலும் ஜான்சிராணியின் உருவம்  பொறிக்கப்பட்டுள்ளது,


    












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காரைக்கால் அம்மையாா்

முத்துலட்சுமி ரெட்டி