வீரமங்கை ராணி வேலுநாச்சியார்

 

இராணி வேலு நாச்சியார்  (03-01-1730 – 25-12-1796)





இளமைக்காலம்

இராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.இவர் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தா . இவரை ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்பட மொழிகள் கற்றார் ஆயுதப் பயிற்சி பெற்றார். குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி அளித்தனர்.


திருமண வாழ்க்கை


இராணி வேலு நாச்சியார்  தமது 16 வயதில் 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத் தேவருக்கு மனைவியானார். 

இந்த தம்பதியர் 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக சிவகங்கையை ஆட்சி செய்தனர்.


கணவாின் மரணம் 

1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார்.

தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினர். வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். 

வேலுநாச்சியார், குயிலி


 ”வேலு நாச்சியார் பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிச்செல்ல ஏதுவாக, ராணியின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் உடையாள் மற்றும் பிற பெண் போராளிகள் அங்கேயே தங்கிவிட்டனர்”     நவாபின் ஆட்கள் உடையாளை பிடித்தனர். அவரை துன்புறுத்திய போதிலும் ராணியின் இருப்பிடத்தை அவர் கூறவே இல்லை. இதனால், அவரது தலை துண்டிக்கப்பட்டது.

காடுகளிலும் கிராமங்களிலும் ஆதரவற்று அலைந்து திரிந்த ராணி வேலு நாச்சியார், சிவகங்கையை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க ஆதரவாளர்களும் உதவி செய்பவர்களும் தேவை என்பதை உணர்ந்தார்.

மருது சகோதரர்கள் விசுவாசிகளின் படையை உருவாக்கத் தொடங்கினர். ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள அது போதுமானதாக இருக்கவில்லை.

மருது சகோதரர்கள்


ஹைதர் அலியை சந்தித்தல்




 
மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு, ஆங்கிலேயர்களுடனோ அல்லது ஆற்காடு நவாபுடனோ நல்லுறவு இருக்கவில்லை. அதனால் ராணி வேலுநாச்சியார் அவரின் உதவியைப் பெற முடிவு செய்து மைசூர் வரை ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.

சிவகங்கையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லில் ஹைதர் அலியைச் சந்தித்தார் வேலு நாச்சியார். அவர் ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி தன்னுடைய தைரியத்தாலும் உறுதியாலும் அவரைக் கவர்ந்தார்.

தனது ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க வேலுநாச்சியாருக்கு ராணுவ உதவி தேவைப்பட்டது. அதேநேரத்தில், அந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு சவால் விடுவதற்கான வாய்ப்பாக ஹைதர் அலி அதைக் கருதினார்.

வேலுநாச்சியாரை திண்டுக்கல் கோட்டையில் தங்கும்படி ஹைதர் அலி கேட்டுக்கொண்டார். அங்கு ராணி போல் அவருக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. நட்பின் அடையாளமாக ஹைதர் அலி தனது அரண்மனைக்குள் வேலுநாச்சியாருக்காக ஒரு கோவிலையும் கட்டினார்.


ஆங்கிலேயர்களுக்கு எதிரான வேலுநாச்சியாரின் போரில் கூட்டாளியாக மாற ஹைதர் அலி தீர்மானித்தார். அவர் வேலுநாச்சியாருக்கு மாதாந்திர உதவித்தொகையாக 400 பவுண்டுகள் மற்றும் ஆயுதங்களையும் கூடவே சையத் கர்க்கியின் தலைமையின் கீழ் 5,000 காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஆதரவையும் வழங்கினார்.

"ராணி வேலு நாச்சியார், இந்தப் படையின் உதவியுடன் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை 1781-இல் அவர் அடைந்தார்,"

கோட்டையை  கைப்பற்ற உதவிய குயிலி




ஆங்கிலேயர்களுக்கு கூடுதல் ராணுவ உதவி கிடைக்காமல் ஹைதர் அலி தடுத்தார். ஆனால் ராணி வேலுநாச்சியாருக்கு கோட்டைக்குள் நுழைய வழி இருக்கவில்லை. உடையாளின் தியாகத்தின் நினைவாக, ராணி வேலுநாச்சியார் அவர் பெயரில் ஒரு மகளிர் படையை உருவாக்கினார். இந்த படையின் தளபதி குயிலி, கோட்டைக் கதவுகளைத் திறக்க ஒரு திட்டத்தை முன்வைத்தார்

விஜயதசமி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அருகில் உள்ள ஊர் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வார்கள். அவர்களுடன் கலந்து நாங்களும் உள்ளே செல்கிறோம். நான் ஆயுதங்களை மறைத்து வைத்தபடி உடையாள் படையின் சிறிய பிரிவுக்கு தலைமையேற்று கோட்டைக்குள் நுழைவேன். பிறகு நாங்கள் கோட்டையின் கதவை உங்களுக்காக திறந்துவிடுகிறோம் என்று குயிலி சொன்னார்.


விஜயதசமி நாள் வந்ததும் குயிலியும், அவருடைய குழுவும் சுற்றுவட்டார ஊர் பெண்களுடன் உள்ளே சென்று பெரிய கோவிலில் திரண்டனர். சடங்கு ஆரம்பித்தது. குறித்த நேரத்தில் குயிலி “சகோதரிகளே! எழுந்திருங்கள்” என்று குரல் எழுப்பினார். 'உடையாள்' பெண்கள் உடனே எழுந்து வாள்களை உருவி காவலுக்கு நின்றிருந்த ஆங்கிலேயர்களை கீழ்படிய வைத்து வாயிலை நோக்கி நகர்ந்தனர்.


வாயிலில் வைக்கப்பட்டிருந்த தீ பந்தத்தை எடுத்து தங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டு, வீரர்களைப் பிடித்தவாறு வெடிமருந்து கிடங்கிற்குள் நுழைந்தார்கள். திடீரென கோட்டையில் இருந்து பெரிய வெடிச் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. இரண்டு 'உடையாள்' பெண்கள் குதிரைகளில் ஏறி ராணி வேலுநாச்சியாரின் படை மறைந்திருந்த இடத்தை அடைந்தனர்.


"ராணி! கதவுகள் திறந்திருக்கின்றன. பிரிட்டிஷ் வெடிமருந்து கிடங்கு தகர்க்கப்பட்டுவிட்டது. தாக்குவதற்கு இதுவே சரியான நேரம்,” என்று ஒரு பெண் வேலுநாச்சியாரிடம் சொன்னாள். குயிலி தன் உயிரை தியாகம் செய்த செய்தியை வேலுநாச்சியாாிடம் படையில் உள்ள பெண்கள் தொிவித்தனா்,  


குதிரையில் அமர்ந்திருந்த ராணி வேலு நாச்சியார் இந்த செய்தியைக் கேட்டதும் உறைந்து போனார். அப்போது சையத் கர்க்கி அவரிடம், "அவரின் தியாகத்தை நாம் வீணடிக்க முடியாது. இப்போது தாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.


ராணி வேலுநாச்சியார் மனதை திடப்படுத்திக் கொண்டு தாக்குதலுக்கு உத்தரவிட்டார். கோட்டையின் உள்ளே கர்னல் வில்லியம்ஸ் ஃப்ளேட்டர்டன் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம், பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றாக்குறையை எதிர்கொண்டது.

1781 ஆகஸ்ட் மாதம் வேலு நாச்சியார் மற்றும் ஹைதர் அலியின் கூட்டுப் படைகள் இறுதியாக கோட்டையைக் கைப்பற்றியதாக எழுத்தாளர் சுரேஷ் குமார் குறிப்பிடுகிறார்.


முதல் இந்திய சுதந்திரப் போருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமையை வேலு நாச்சியார் இதன் மூலம் பெற்றார்.

அடுத்த 10 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்ட அவர் தனது மகள் வெள்ளச்சியிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்தார்.


வேலு நாச்சியார், எதிரிகளின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவராக இருந்தார் என்று வரலாற்று ஆய்வாளர் மணிகண்டன் கூறுகிறார். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுடன் கூட்டு சேர்ந்து பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு சவால் விட்டது அவரது உத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு.

வேலுநாச்சியார் ஒரு உக்கிரமான போர் வீரராக புகழ் பெற்றிருந்தாலும் தனது குடிமக்களிடம் அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார்.

அவர் தனது மக்களை நேசித்த ஒரு நேர்மையான மற்றும் நியாயமான ஆட்சியாளர் என்று வரலாற்றாசிரியர் வி.பத்மாவதி குறிப்பிடுகிறார்.

ஆளும் வர்க்கத்தால் துன்புறுத்தப்பட்ட தலித்துகளுக்கு அடைக்கலம் கொடுக்க அவர் எடுத்த முடிவு அவரது இரக்க குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.


"பிறப்பிலேயே அவர் ஒரு நாயகி" என்கிறார் ஆர்.மணிகண்டன்.


வேலு நாச்சியார் ஆட்சிக்காலம்

இராணி வேலு நாச்சியார்

வெற்றிக்குப் பிறகு வேலு நாச்சியார் ஒரு தசாப்தம் ஆட்சி செய்தார். இக்கட்டான காலத்தில் உறுதுணையாக இருந்த தனது தோழர்களுக்கு ராஜ்ஜியத்தில் முக்கிய பதவிகளை வழங்கினார். வேலு நாச்சியார் ஹைதர் அலியின் வரம்பற்ற உதவியை கெளரவிக்கும் விதமாக சார்கானியில் ஒரு மசூதியைக் கட்டினார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாம் மைசூர் போரில் வேலு நாச்சியார் ஹைதர் அலியை ஆதரித்து அவருக்கு உதவியாக தனது ராணுவத்தை அனுப்பியதாக ஜே.ஹெச்.ரைஸ் 'தி மைசூர் ஸ்டேட் கெஃசட்டியர்' இதழில் எழுதியுள்ளார்.

ஹைதர் அலியின் மரணத்திற்குப் பிறகு வேலுநாச்சியார் அவரது மகன் திப்பு சுல்தானுடன் நட்புறவைப் பேணி, அவரை ஒரு சகோதரனைப் போல நேசித்தார். வேலு நாச்சியார் திப்பு சுல்தானுக்கு ஒரு சிங்கத்தை அன்பளிப்பாக அனுப்பினார்.


ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் குறித்த தனது புத்தகத்தில் முஹிப்புல் ஹசன், ”படையை வலுப்படுத்த திப்பு சுல்தான் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வேலு நாச்சியாருக்கு கொடுத்தார்,” என்று எழுதியுள்ளார்.

திப்பு சுல்தான் வேலு நாச்சியாருக்கு ஒரு வாளை அனுப்பினார். அதை அவர் பல போர்களில் பயன்படுத்தினார்.

வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார். வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு சிவகங்கையில் காலமானார்.



நினைவுச்சின்னங்கள்


2008 ஆம் ஆண்டில் அவரது நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. 




2014 ஆம் ஆண்டு சிவகங்கையில் வீர மங்கை வேலு நாச்சியார் நினைவிடத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ராணியின் 6 அடி வெண்கலச் சிலையும் அங்கு நிறுவப்பட்டது.


 இராணி வேலு நாச்சியார்



இந்த நினைவுச்சின்னம் கடந்த 5 ஆண்டுகளாக திண்டுக்கல் நகரில் ஒரு பிரபல சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. இதே திண்டுக்கல்லில்தான் ஹைதர் அலிக்கும் வேலு நாச்சியாரும் இடையிலான நீண்டகால நட்பு துளிர் விட்டது.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காரைக்கால் அம்மையாா்

வீரப்பெண்மணி “ஜான்சி ராணி”

முத்துலட்சுமி ரெட்டி